புதிய அமைச்சரவையில் தொண்டமானிற்கு திகாவின் அமைச்சு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அமைச்சரவை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் புதிய அமைச்சரவை இன்று(வெள்ளிக்கிழமை) காலை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளது.

இதன்போது சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக ஆறுமுகம் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கத்தில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக திகாம்பரம் செயற்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்