ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – புதிய ஜனாதிபதியிடம் கோரிக்கை!

ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகைக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

நேற்று(வியாழக்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்ததாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் குறித்த சந்திப்பின் போதே பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகை இவ்வாறு கோரிக்கை விடுத்திருந்ததாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக நீதியான விசாரணை நடத்தி அதற்கு பொறுப்பானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு பேராயர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலின் போது 250 இற்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்திருந்ததுடன், 300 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்