யாழில் மீனவர்களிடம் சிக்கிய பாரிய சுறா மீன்

யாழ்ப்பாணத்தில் மீனவர் ஒருவருக்கு பாரிய சுறா மீனொன்று சிக்கியுள்ளது.

குறித்த சுறா மீன் 2000 கிலோ கிராம் நிறையுடையதென குறித்த மீனவர் தெரிவித்துள்ளார்.

நயினாதீவை சேர்ந்த மீனவர் ஒருவரின் வலையிலேயே இன்று (வெள்ளிக்கிழமை)  இந்த சுறா சிக்கியது. இதனை தண்ணீர் சுறா என மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.

குறித்த மீனை பார்ப்பதற்கு இளைஞர்கள் குவிந்துள்ளதுடன் செல்பி எடுத்து, முகப்புத்தகங்களிலும் பதிவேற்றி வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்