புதிய அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர்கள் எதிர்வரும் 25ஆம் திகதி பதவி பிரமாணம்!

புதிய அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர்கள் எதிர்வரும் 25ஆம் திகதி பதவி பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் புதிய அமைச்சர்கள் இன்று காலை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து அங்கு உரையாற்றிய போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இராஜாங்க அமைச்சர்கள் தங்களது கடமைகளை செய்ய இன்று பதவியேற்ற அமைச்சர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த காலங்களில் இராஜாங்க அமைச்சர்கள் ஓரங்கட்டப்பட்டதாகவும், இனியும் அப்படி நடக்க கூடாது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன், அரச நிறுவனங்கள், ஸ்தாபனங்களின் தலைவர் மற்றும் பணிப்பாளர் சபைக்கு நிமனங்களை வழங்கு போது தகுதியானவர்கள் மாத்திரமே நியமிக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் சட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான நியமனங்களை வழங்குவதற்காக தேர்வுச் சபை ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள் இவ்வாறான நியமனங்களை வழங்கும்போது நியமிக்கவுள்ளோரின் தகுதிகளை குறித்த சபைக்கு அனுப்ப வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது அவர்களிடம் அதற்கான தகுதி இருக்கிறதா என்பது பரிசீலிக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன், தொழில்சார் நிபுணத்துவம் தேவையற்ற பதவிகளில் வெற்றிடம் ஏற்படும்போது அந்தந்த மாவட்டங்களில் வறுமை நிலையில் உள்ளவர்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர்; குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்