சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்வது குறித்த செயலமர்வு

அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் நிதி அனுசரணையுடன் ‘உள்வாங்கப்பட்ட வளர்சிக்கான திறன்கள் அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம்’ எனும் திறன்விருத்தி தொடர்பான செயலமர்வு திருகோணமலையில் நடைபெற்றது.

குறித்த நிகழ்ச்சித் திட்டம் மூலம் சுற்றுலாத்துறையுடன் இணைந்த திறன்விருத்தியின் நடைமுறைப்படுத்தப்பட்ட மற்றும் நடைமுறையில் உள்ள செயற்திட்டங்கள் தொடர்பாக திருகோணமலை ஊடகவியலாளர்களுக்கு நேற்று (வியாழக்கிழமை) விளக்கமளிக்கப்பட்டது.

திருகோணமலையில் சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்வதில் ஊடகவியலாளரின் பங்கு பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க திருகோணமலையின் முக்கிய இடங்கள் நிகழ்வுகள் பற்றி போதுமான வரை மக்களுக்கு தெளிவுபடுத்தும் செயற்திட்டங்களை முன்னெடுப்பது குறித்தும் உரையாடப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்