ஜனாதிபதி கோட்டாபயவுக்கு ரஷ்ய ஜனாதிபதி வாழ்த்து!

நாட்டின் 7ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

‘நீங்கள் ஒவ்வொரு வெற்றிகளையும், நல்ல ஆரோக்கியத்தையும், செழிப்பையும் பெற வாழ்த்துகிறேன்’  என அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கோட்டாபயவின் ஆட்சியின் கீழ் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உரையாடல் மற்றும் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பு பலப்படுத்தப்படும் எனவும் புடின் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும், இது பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்த உதவும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்