வவுனியாவில் முன்பள்ளி ஆசிரியர்கள் கௌரவிப்பு விழா!

வவுனியா மாவட்ட முன்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் ‘ஆசிரியர் தினமும் முன்பள்ளி ஆசிரியர் கௌரவிப்பு நிகழ்வும்’ இடம்பெற்றது.

வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இந்நிகழ்வில் முதன்முறையாக 450இற்கும் மேற்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் முதன்மை அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனும் சிறப்பு அதிதிகளாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம், முன்னாள் மாகாண உறுப்பினர் செ.மயூரன், முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர் தர்மபாலன் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

முன்னதாக விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டதுடன், மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியன.

விசேடமாக முன்பள்ளி ஆசிரியர்களின் கலை காலாசார நிகழ்வுகள் இடம்பெற்றிருந்ததுடன் ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்