மன்னாரில் மனித உரிமை ஆணைக்குழுவின் விசேட நடமாடும் சேவை
மன்னார், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலுப்பைக்கடவை பகுதியில் விசேட நடமாடும் சேவை நடைபெற்றுள்ளது.
இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் மன்னார் உப காரியாலயத்தின் ஏற்பாட்டில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் தலைமையில் இலுப்பைகடவை கலாசார மண்டபத்தில் இந்த சேவை இடம்பெற்றது.
குறித்த நடமாடும் சேவைக்காக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ், மாகாண, மாவட்ட ரீதியான திணைக்களங்களின் அதிகாரிகள், ஆணையாளர்கள், பிரதேச செயலாளர்கள் உட்பட பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் வருகைதந்திருந்தனர்.
மக்களின் காணி, அடிப்படை உரிமை, சட்ட உதவி போன்ற விடயங்கள் தொடர்பாக விசேட உதவிகளை வழங்கும் முகமாக குறித்த நடாமாடும் சேவை ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன்போது மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக் கணக்கானவர்கள் கலந்துகொண்டு பயனடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை