ரணிலுக்கு வழங்கப்பட்டு வந்த விசேட அதிரடிப்படை பாதுகாப்பு நீக்கம்

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்டு வந்த விசேட அதிரடிப்படை பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது.

புதிய ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ஷ, பல்வேறு அதிரடி நடவடிக்கைகள தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றார்.

அந்தவகையில் தற்போது  ரணில் உள்ளிட்ட பல ஐ.தே.க பிரமுகர்களின் விசேட அதிரடிப்படை பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர்கள் மலிக் சமரவிக்கரம, திலக் மாரப்பன ஆகியோரின் விசேட அதிரடிப்படை பாதுகாப்பும் விலக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் விசேட அதிரடிப்படைப் பாதுகாப்பு விலக்கப்படவில்லையென குறிப்பிடப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்