மக்களின் பாதுகாப்புக்காக இராணுவ வீரர்களை சேவையில் ஈடுபடுத்தும் வர்த்தமானி வெளியானது!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டில் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கை பேணும் வகையில் ஆயுதப்படைகளை (இராணுவம், கடற்படை, விமானப்படை) அழைக்கும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று(வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன், குறிப்பிடப்பட்ட சில பகுதிகளில் பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் அமைதியை நிலைநாட்டும் பணிகளில் ஆயுதப்படையினர் (இராணுவம், கடற்படை, விமானப்படை) ஈடுபடும் வகையிலும் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மக்களின் பாதுகாப்புக்காக இராணுவ வீரர்களை சேவையில் நிறுத்தும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் குறித்த நடவடிக்கையை ஜனாதிபதி எடுத்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்