ஜனாதிபதியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர்!

இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் ரியாஸ் ஹமிதுல்லாவிற்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஜனாதிபதிக்கு பங்களாதேஷ் அரசாங்கத்தின் சார்பில் உயர்ஸ்தானிகர், வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வது குறித்தும் இதன்போது ஆராயப்பட்டிருந்ததாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்