தீண்டிய பாம்பின் தலையைக் கடித்து துண்டாக்கினார் இளைஞன்!

குருநாகல் ஹெட்­டிப்­பொல, நாகொல்­லா­கொட பகுதியில்,தன்னைத் தீண்­டிய பாம்பின் தலையைக் கடித்து துண்டாக்கினார் இளைஞன் ஒருவர். இத­னை­ய­டுத்து சுக­யீ­ன­ம­டைந்த இளை­ஞனை அவ­ரது உற­வி­னர்கள் வைத்­தி­ய­சா­லையில் அனுமதித்துள்ளனர். அவரால் கடித்து துண்­டாக்­கப்­பட்ட பாம்­பையும் உற­வி­னர்கள் வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு சென்­றுள்­ளனர்.

குறித்த இளைஞர் நண்­பர்­க­ளுடன் இணைந்து மதுபானம் அருந்­தி­விட்டு வீடு திரும்பும் வழி­யி­லேயே அவரை பாம்பு தீண்­டி­யுள்­ளது. பாம்பு தன்னை தீண்­டிய கோபத்தில் போதை­யி­லி­ருந்த அந்த இளைஞர் குறித்த பாம்பைப் பிடித்து அதன் தலையைக் கடித்­துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்