சிறை அதிகாரிகளுக்கு மிளகாய் பொடிவீசிவிட்டு தப்பிச்சென்ற கைதி துரத்திப்பிடிப்பு!

சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு மிளகாய்பொடி தூவிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற இரட்டைகொலைதாரியான கைதியை மற்றுமொரு சிறைச்சாலை உத்தியோகத்தர் துரத்தி பிடித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பு வைத்தியசாலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

சுகயீனம் காரணமாக கொழும்பு வைத்தியசாலையில் இரட்டை கொலை குற்றவாளி ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.இதன்போது நேற்றையதினம் சிறைச்சாலை அதிகாரிகள் மீது குறித்த கைதி மிளகாய்பொடிகளை தூவிவிட்டு தப்பிச்சென்றுள்ளார் இதன்போது இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் பாதிக்கப்பட மற்றுமொரு சிறைச்சாலை அதிகாரி குறித்த கைதியை துரத்திப் பிடித்து கைது செய்துள்ளார்.

மகர சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்துவரும் கைதியே இவ்வாறு தப்பிச் செல்ல முயன்றவராவா்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்