கிளிநொச்சியில் விபத்து – நால்வர் படுகாயம்!

பூநகரி செல்விபுரம் வீதி வளைவில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர்.

இரண்டு பாரவூர்திகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதாலேயே இன்று (சனிக்கிழமை) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

படுகாயமடைந்தவர்களில் மூவர் யாழ். வைத்தியசாலையிலும், ஒருவர் பூநகரி வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்