லண்டனில் மாவீரர் மாதத்தில் உணர்வுபூர்மான குருதிக் கொடை!

“எம் தாயகவிடுதலைக்காக தம் இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை நெஞ்சில் நிறுத்தியும் நினைவுகூர்ந்தும் மாவீரர் மற்றும் எம்மக்கள் சார்பில் இங்கிலாந்தில் உள்ள மக்கள் பலர் இரத்தானம் வழங்கியிருந்தார்கள்.

குறிப்பாக Liverpool பகுதியில் 22/11/2019 அன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் 11 மணி முதல் 3 மணி வரை இரத்த தான முகாம் நடைபெற்றது, பின்பு அதனை தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு மாவீரர்களுக்கான நினைவஞ்சலி நிகழ்வும் உணர்சிபூர்வமாக நடைபெற்றது.
பல பொதுமக்கள் கலந்துகொண்டு எங்களுக்காக போராடிமடிந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியோடு அவர்களின் கொள்கையில் தொடர்ந்து பயணிப்போம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டார்கள்.

இதனையடுத்து நேற்றைய தினம் 24/11/2019 ஞாயிற்றுக்கிழமை லண்டன் மாநகரில் Tooting, Edgware மற்றும் Southall பகுதிகளிலும் இரத்ததான முகாம்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெருமளவிலான செயற்பாட்டாளர்களும் பொதுமக்களும் இதில் கலந்துகொண்டு இரத்த தானம் செய்தனர். மாவீரர்களின் உயிர்த்தியாகத்தை நினைவுகூர்வது மட்டுமல்லாது அதனை உலகறியச் செய்வதாகவும் இந்நிகழ்வு அமைந்தது குறிப்பிடத்தக்கது.

எம் மாவீரர்கள் நினைவு சுமந்த இரத்ததான நிகழ்வு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் இங்கிலாந்தில் தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதத்தில் நடாத்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

ஒன்று படுவோம் வென்றெடுப்போம் எம் மாவீர்ர்களது கனவை… தமிழீழம், தமிழீழம், தமிழீழம் எம் மாவீர்ர்கள் கூறிய இறுதி வார்த்தை எம் செவிகளில் என்றும் ஒலிக்கட்டும்.
எமது இரத்தம் மற்றவர்களது உயிர் காக்கவே என்று எமக்கு உணர்த்திய எம் மாவீரர்களது நினைவுகளை மனதில் சுமந்தவாறு நாம் அனைவரும் ஒன்றிணைந்து தமிழீழம் நோக்கி அணிவகுத்துச் செல்வோம்..

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்