திறைசேரி முறிகள் விநியோகம் குறித்த அறிவிப்பு வெளியானது!

ருபத்தெட்டாயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி முறிகள் விநியோகம் இடம்பெறவுள்ளது.

இலங்கை மத்திய வங்கி இந்த தகவலினை வெளியிட்டுள்ளது.

இன்று(புதன்கிழமை) இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், இன்று காலை 11 மணி வரை பிணைமுறிகளை சமர்ப்பிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 29ஆம் திகதி அதற்கான கொடுப்பனவுகளை செலுத்த வேண்டும் எனவும் இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்