3 இலட்சம் பெருமதியான முதிரைகுற்றிகளுடன் பூநகரி பொலீசாரால் இருவர் கைது

கிளிநொச்சி பூநகரபிரதேச செயலகத்திற்கு உட்பட்ட  காட்டுபகுதியில் சட்டத்திற்கு முரணாக பெறுமதிவாய்ந்த முதிரைகுற்றிகளை அரிந்து சங்குபிட்டி பாலத்தின் ஊடாக யாழ்மாவட்டத்திற்கு   கடத்த முற்பட்ட நபர் இருவர் பூநகரி பொலீசாரால் கைது செய்யபபட்டுள்ளதுடன் கண்டர் வாகனம் மற்றும் மரக்குற்றிகளையும் கைப்பற்றி உள்ளனர்.
 குறித்தசம்பவமானது இன்று காலை 6மணியளவில் இடம்பெற்றுள்ளது இது குறித்து மேலும் தெரிய வருவதாவது கிளிநொச்சி பூநகரி புலானாய்வு பொலிசாருக்கு கிடைத்ததகவலுக்கு அமைய பூநகரி  பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி கடத்தமுற்பட்ட மரக்குற்றிகளையே பொலிசார் மடக்கி பிடத்துள்ளதுடன் குறித்த குற்றிகள் 3இலச்சம் பெறுமதிவாய்ந்தவை என பொலிசார் கூறியதுடன் குறித்த சம்பவம் தொடர்பில் வாகனத்தின் சாரதி மற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரனைகளை பூநகரி பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்