சகல பாடசாலைகளிலும் 50 ஆயிரம் பேர் ஆசிரிய உதவியாளர்கள் நியமனம்!

சகல பாடசாலைகளிலும் ஆரம்ப பிரிவுகளுக்காக 50 ஆயிரம் ஆசிரிய உதவியாளர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வாக 2020ஆம் ஆண்டில் சகல பாடசாலைகளிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

நடைமுறைச் சாத்தியமான வேலைத் திட்டம் ஊடாக இந்த நடவடிக்கை அமுல்படுத்தப்படவுள்ளது.

நடைமுறைச் சாத்தியமான வேலைத் திட்டத்தின் கீழ் சகல பாடசாலைகளிலும் ஆரம்ப பிரிவுகளுக்காக ஆசிரிய உதவியாளர்கள் இணைத்துக் கொள்ளவுள்ளதா தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்த்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்