வெள்ள நீர் வீதிக்கு குறுக்காக பாய்வதால் மண்டூர் வெல்லவெளி பிரதான பாதையில் போக்குவரத்து செய்வதில் சிரமம்

மட்டக்களப்பு  மாவட்டத்தில்  இரு வார காலத்திற்கு மேலாக பெய்து வரும் அடை மழை காரணமாக மண்டூர் வெல்லாவெளி  பிரதான வீதியை ஊடறுத்து பாயும் வெள்ள நீரால் போக்குவரது செய்வதில்  சிரமம் ஏற்பட்டுள்ளது.

மண்டூர் பிரதேசத்தையும் , வெல்லாவெளி பிரதேசத்தையும் இணைக்கும்    பிரதான பாதையில் இரு இடங்களினால் வெள்ள நீர் வடிந்தோட தொடங்கியுள்ளது .
குறிப்பாக  மட்டு  மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்தில் வயல்கள் மழை வெள்ளத்தால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது, மழையின் காரணமாக   சிறு குளங்கள்  நிரம்பியுள்ளமையினாலும் அந்த குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையினால் வீதியை ஊடறுத்து பாயும் வெள்ள நீர் அதிகரித்து செல்கின்றது.
நீர் கூடுதலாக ஊடறுத்து செல்வதனால் அவ் வீதியில் பயணிக்கும் போது மோட்டார் வாகனங்களினுள் நீர் உட்புகுந்து பழுதடைந்ததை காணமுடிந்தது. பாடசாலை  மாணவர்கள் , வேலைக்கு செல்வோரும் நனைந்த ஆடையுடனே செல்கின்றனர். .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்