சஜித் தோல்வியடைந்தமைக்கான காரணத்தை அம்பலப்படுத்தினார் விக்ரமபாகு

இனவாதக் கருத்துக்களுக்கு உரிய பதில் வழங்காமல் விட்டமைத்தான் சஜித் பிரேமதாசவின் தோல்விக்குக் காரணமாக அமைந்துள்ளதாக நவசமசமாஜக் கட்சியின் செயலாளர் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். விக்ரமபாகு கருணாரட்ன மேலும் கூறியுள்ளதாவது, “ஜனாதிபதித் தேர்தலில் எமது தரப்பு தோல்வியடைவதற்கு, இனவாத- மதவாத செயற்பாடுகளை புரிந்துக் கொள்ளாமல் விட்டதுதான் பிரதானக் காரணமாக இருக்கிறது.

நாம் இனவாத- மதவாத செயற்பாடுகளுக்கு பதில் வழங்காமல் போய்விட்டோம். மேல்மட்டத்தில் பிரசாரங்களை மேற்கொண்டாலும், கீழ் தட்டு மக்களுக்காக நாம் பிரசாரம் மேற்கொள்ளவில்லை. இருந்தாலும், தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் என அனைவரும் எமது தரப்புக்கு வாக்களித்தார்கள்.

இவர்கள் இன்று எமது அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனை தலைவர்கள் உணர்ந்து செயற்பட வேண்டும் என்பதுதான் எமது வேண்டுகோளாகும்” என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்