ரயில்களில் யாசகத்தில் ஈடுபடுபவர்களுக்கு சிறை!

ரயில்களில் யாசகத்தில் ஈடுபடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த திட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.

ரயில்களில் யாசகத்தில் ஈடுபடுபவர்களையும் அவசியமற்ற முறையில் வர்த்தக நடவடிக்கைளில் ஈடுபடுபவர்களையும் அதிலிருந்து வெளியேற்றுவதற்கு இன்று முதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

யாசகர்கள் மற்றும் அவசியமற்ற முறையில் வர்த்தக நடவடிக்கைளில் ஈடுபடுபவர்கள் தொடர்பாக பயணிகளிடமிருந்து முறைப்பாடு கிடைத்துள்ளதாக ரயில்வே திணைக்கள பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று முதல் அவர்களை கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்