சுவிஸ் தூதரக பெண் பணியாளர் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டார்?

சுவிஸ் தூதரக பெண் பணியாளர் கடத்தப்பட்ட பின்னர் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டார் என இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவம் நவம்பர் 25ஆம் திகதி சுவிஸ் தூதரகம் அமைந்துள்ள ஆர்.பி.சேனநாயக்க மாவத்தையில் இடம்பெற்றதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என சண்டே டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

இந்த பகுதியிலேயே அவுஸ்ரேலிய ஜப்பான் தூதரகங்களும் அமைந்துள்ளன என தெரிவித்துள்ள சண்டேடைம்ஸ், பாதிக்கப்பட்டவர் இலங்கையை சேர்ந்த பெண் என்றும் இவர் சுவிட்சர்லாந்து தூதரகத்தின் குடியேற்ற விவகாரங்களிற்கு பொறுப்பான சுவிட்சர்லாந்தை சேர்ந்த அதிகாரியின் உதவியாளராக பணியாற்றினார் எனவும் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு காரணங்களிற்காக பெயர் விபரங்களை வெளியிடவில்லை என தெரிவித்துள்ள சண்டே டைம்ஸ் குறிப்பிட்ட பெண் பணியாளர் அருகிலுள்ள பாடசாலை கட்டடத்திலிருந்து வெளியேறியவேளை ஐந்துபேர் வெள்ளை நிற டொயோட்டா கொரலா காரில் அவரை பின்தொடர்ந்தனர் எனவும் இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி தெரிவித்துள்ளது.

அவர்கள் தூதரக பணியாரை தங்கள் காரிற்குள் பலவந்தமாக ஏற்றிய பின்னர் அங்கிருந்து புறப்பட்டு, இரண்டு மணிநேரத்தின் பின்னரே அவர் விடுவிக்கப்பட்டார் என சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட பெண் பணியாளர் பாலியல் ரீதியில் தான் துன்புறுத்தப்பட்டதாக முறைப்பாடு செய்தார் என்றும் அவரை கடத்தியவர்கள் கண்ணை கறுப்பு துணியால் மூடியுள்ளனர் என சம்பவம் குறித்த விபரங்களை அறிந்த இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன என சண்டேடைம்ஸ் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்