நாட்டின் பல இடங்களில் மின்சாரம் தடை

நாட்டின் பல பகுதிகளில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. சீரற்ற வானிலை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

பண்டாரவளை, ஹப்புத்தளை, தியத்தலாவ, வெலிமட, ருவண்வெல்ல, பலாங்கொடை மற்றும் குருநாகல் ஆகிய பகுதிகளில் இவ்வாறு மின்சார விநியோக தடை ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக சுமார் ஐயாயிரம் மின்சார பாவணையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஷனா ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்