அம்பாறை கிட்டங்கி பாலத்தில் வெள்ள நீர் பரவல்- பொதுமக்கள் பாதிப்பு

அம்பாறை மாவட்டத்தில்  இருவார காலத்திற்கு மேலாக பெய்து வரும் அடைமழை காரணமாக  கிட்டங்கி வாவியூடாக ஊடறுத்து செல்லும்   பிரதான வீதி   வெள்ள நீரால் மூழ்கி உள்ளமை காரணமாக  பொதுமக்கள்  போக்குவரத்து செய்வதில்  சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
 கல்முனை பிரதேசத்தையும் நாவிதன்வெளி பிரதேசத்தையும் இணைக்கும்  கிட்டங்கி வாவியூடாக செல்லும் குறித்த  பிரதான பாதையில் வெள்ள நீர் கடந்த சில தினங்களுக்கு முன்னர்  வடிந்தோட தொடங்கியுள்ளது .
இங்கு  தற்போது அதிகளவான  ஆற்றுவாழைகளும் வெள்ள நீருடன் அடித்து செல்லப்படுவதால் அப்பகுதியில்  போக்குவரத்து செய்வதில் சிரமங்களை பொதுமக்கள் எதிர்கொண்டுள்ளனர்.
அத்துடன்  அம்பாறை மாவட்டத்தின்  பல பகுதிகளில்  வயல்கள் நிலங்கள்  மழை வெள்ளத்தால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதுடன்    மாவட்டதிலுள்ள சிறு குளங்கள்  நிரம்பி அருகில் உள்ள தாழ் நிலங்கள் நீரில் மூழ்கி வருகின்றன.
இப்பகுதியில் உள்ள  சில குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையினால் வீதியை ஊடறுத்து பாயும் வெள்ள நீர் மேலும்  அதிகரித்து செல்கின்றதை காண முடிகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்