எஇ.தொ.கா.-ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுண இணைந்து நுவரெலியா மாவட்ட பாலர் பாடசாலை மேம்படுத்த நடவடிக்கை.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுண இணைந்து நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பாலர் பாடசாலைகளை மேம்படுத்துவதற்கான திட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளது.
இதற்கமைய பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குதல்,பாலர் பாடசாலைகளுக்கான உபகரணங்களை பெற்றுக்கொடுத்தல் அடிபடை வசதிகள் ஏற்படுத்தி கொடுத்தல். ஆகியன மேற்கொள்ளப்படவுள்ளன.
இதில் முதலாம் கட்டமாக அம்பகமுவ பகுதியில் உள்ள தெரிவு செய்யப்பட்ட பாலர் பாடசாலைகளில் சேவையாற்றும் ஆசிரியர்களுக்கு கற்றல் உபகரணங்கள் பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு ஒன்று நேற்று (01) ஹட்டன் தென்னிந்திய திருச்சிலுவை ஆலயத்தில் நடைபெற்றது.
இதன் போது தெரிவு செய்யப்பட்ட 50 மேற்பட்ட ஆசிரியர்களுக்கு கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டன.
இதன் போது லைப் லோங் சுப்பர் பியுச்சர் என்ற அமைப்பும் அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வுக்கு ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவின் அமைப்பாளர்களான ஜெயகுமார்,அருள்,யோகேஸ்வரன்,அரசியல் ஆலோசகர் கே.சுரேஸ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்