நிஷாந்த சில்வாவை நாட்டிக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வாவை சர்வதேச பொலிஸாரின் ஊடாக நாட்டிற்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர்களின் செயலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமைச்சர்களின் செயலாளர்கள் சங்கத்தினரின் ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது.

இதன்போது அதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர்கள் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.

பல்வேறு விசாரணை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த, கடந்த 24 ஆம் திகதி  தனது குடும்பத்தாருடன் நாட்டை விட்டு வெளியேறி சென்றுள்ளார்.

அவர் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சுவிட்சர்லாந்து நோக்கி பயணமாகியுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

இந்நிலையிலேயே நிஷாந்த சில்வா அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறியுள்ளமை தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே நிஷாந்த சில்வாவை இலங்கைக்கு மீண்டும் அழைத்து வருவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு  அமைச்சர்களின் செயலாளர்கள், கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்