யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபராக மகேஷ் சேனாரத்ன பதவியேற்பு

யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக மகேஷ் சேனாரத்ன பதவியேற்றுள்ளார்.

யாழ்ப்பாணம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் அவர் தனது கடமைகளை இன்று (திங்கட்கிழமை) முற்பகல் 11.15 மணியளவில் பொறுப்பேற்றார்.

மகேஷ் சேனாரத்ன பொலிஸ் தலைமையக்கதில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆய்வு மையத்தின் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றினார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த ராஜித, பிரதமரின் பாதுகாப்புப் பிரிவுக்கு மாற்றம்பெற்று சென்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்