அநுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து 7 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை

அநுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து தண்டனை அளிக்கப்பட 7 தமிழ் அரசியல் கைதிகளை அரசு நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை அவர்களின் தண்டனைக்காலம் முடிவடைவதற்கு முன்னதாகவே ஆரவாரம்  எதுவும் இன்றி விடுதலை செய்துள்ளது.

இந்த 7 சிறைக் கைதிகளும் யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் வவுனியாவைச் சேர்ந்தவர்கள்.

இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்களில் ஒருவரான யாழ். குருநகர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (வயது – 36) என்பவர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில்,

“நேற்று செவ்வாய்க்கிழமை அநுராதபுரம் சிறைச்சாலை அதிகாரிகள் எம்மைத்  திடீரென அழைத்து விடுதலை செய்வதாகக் கூறினார்கள். மேலதிக அறிவித்தல் வரும்வரை எமது மாவட்டங்களில் உள்ள சிறைச்சாலைகளில் எம்மைத் தினமும் கையெழுத்து இடுமாறு அவர்கள் கூறினார்கள். அதற்கிணங்க நான் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தினமும் கையெழுத்திட வேண்டும்.

10 வருடங்கள் எனக்குத் தண்டனை வழங்கப்பட்டிருந்தது. ஆனாலும், தண்டனைக் காலம் முடிவடைவதற்கு முன்னதாகவே நான் விடுதலை செய்யப்பட்டுள்ளேன்.

மேலும் பலர் இவ்வாறு விடுதலை செய்யப்படலாம் என்று நம்புகின்றேன்” – என்றார்.

ஆனால், 7 தமிழ் அரசியல் கைதிகள் நேற்று விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் அரசோ அல்லது சிறைச்சாலை அதிகாரிகளோ இன்னமும் தகவல் எதனையும் வெளியிடவில்லை.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்