கோட்டாவைக் கொலைசெய்யச் சதி: 4 தமிழர்களுக்கும் பொலிஸ் பிணை! – முஸ்லிம் நபர் தடுத்துவைப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கொலை செய்யச் சதித்திட்டம் தீட்டியவர்கள் எனும் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட 5 பேரில் 4 தமிழர்களும் பொலிஸ் பிணையில் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, ஓட்டமாவடியைச் சேர்ந்த முகமது றிப்கான் என்ற முஸ்லிம் நபரை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 72 மணித்தியாலம் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள மினுவாங்கொடை நீதிவான் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

றிப்கான் என்பவர் இந்தச் சதித்திட்டத்தின் பிரதான சூத்திரதாரி எனவும், இவர் வெளிநாடுகளில் வேலை செய்தவர் எனவும், ஹிந்தி மற்றும் பிறமொழிகளில் பரிச்சயமானவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்