பால்நிலை வன்முறைக்கு எதிரான பதினாறு நாள் விழிப்புணர்வு

யாழ் சமூக செயற்பாட்டு மையத்தினால் (துளுயுஊ) ருNர்ஊசு மற்றும் டீசவiளா உழரnஉடை ஆகியவற்றின் நிதிப்பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டுவரும் பால்நிலை வன்முறைக்கு எதிரான பதினாறு நாள் விழிப்புணர்வு செயற்பாடுகள் கடந்த நவம்பர் மாதம் 25ம்திகதி முதல் மார்கழி 10ம் திகதி வரை “பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் சுதந்திரமானதும் பாதுகாப்பானதுமான சூமலினை உருவாக்குவோம்” என்னும் தொனிப்பொருளில் வட மாகாணத்தின் ஜந்து மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதனொரு செயற்பாடாக இன்று வட மாகாணம் முழுவதும் பொதுப்போக்குவரத்தில் தொடர்ச்சியாக ஏற்படுகின்ற பால்நிலை வன்முறைகளினை குறைக்கின்ற வகையில் விழிப்புணர்வு ஊட்டுகின்ற ளுவiஉமநசள என்பன வாகனங்களில் பரவலாக ஒட்டப்பட்டதுடன் விழிப்புணர்வு பிரசுரங்களும் பொது இடங்களில் விநியோகம் செய்யப்படட்டுள்ளன. இந்நிகழ்வில் யாழ் சமூக செயற்பாட்டு மைய பணியாளர்கள், மாவட்ட மட்டங்களில் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்., மனித உரிமைக்குழு ஆணையாளர், பொது அமைப்புக்களின் பிரநிதிகள் மற்றும் பொலிஸ்ஸார் ஆகியோர் பங்கேற்றார்கள். இந்நிகழ்விற்கு அனைத்து துறைசார்ந்தவர்களும் முழுமையான ஒத்துழைப்பினை வழங்கி வருகின்றார்கள். இந்நிகழ்வானது எதிர்வரும் 10ம்திகதி வரை இடம்பெறவுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்