ஷாபியின் சொத்து விபரத்தை நியாயப்படுத்திய அதிகாரிக்கு எதிராக விசாரணை- ரத்தன தேரர்

குருணாகல் வைத்தியசாலை வைத்தியர் ஷாபி சாப்தீனின் சொத்து விபரத்தை நியாயப்படுத்திய அதிகாரிக்கு எதிராக விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் கோரியுள்ளார்

மேலும் வைத்தியருக்கு எதிராக விசாரணைகளை நடத்திய அதிகாரி, குறித்த வைத்தியர் மீதான குற்றச்சாட்டுகளை தவறவிட்டதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபிக்கு எதிராக கருத்தடை சிகிச்சை குறித்து  335 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

அதேபோன்று சட்டவிரோதமாக சொத்து சேர்த்தமை தொடர்பாகவும் அவர் மீது முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்