சிங்கள பவுத்த தேசியவாதமும் மற்றும் சிறுபான்மையினரை ஓரங்கட்டலும்

சத்யஜித் அண்ட்ராடி

(இந்த மாதம் டிசெம்பர் 03 ஆம்  நாள் வெளிவந்த த ஐலன்ட் என்ற நாளேடு  சிங்கள பவுத்த  தேசியவாதமும் மற்றும் சிறுபான்மையினரை ஓரங்கட்டலும் (Sinhala Buddhist nationalism and marginalisation of minorities) என்ற தலைப்பில்  சத்யஜித் அண்ட்ராடி எழுதிய ஒரு கட்டுரை வெளிவந்தது. இந்தக் கட்டுரை மார்க்சீய கண்ணோட்டத்தில் எழுதப்பட்டுள்ளது. எல்லாளன் – துட்ட கைமுனு யுத்தம்  தமிழ்மன்னன் எல்லாளனுக்கும் சிங்கள மன்னன் துட்ட கைமுனுவுக்கும் இடையிலான போர் என்று சிங்கள வரலாற்றாசிரியர்கள் எழுதுகிறார்கள். உண்மை அதுவல்ல. துட்ட கைமுனு ஒரு நாகர் குல இளவரசன். அவனுடைய தந்தை மதம் மாறிய தேவனம்பிய தீசனின் தம்பி மகாநாகனது மகன் யட்டலக தீசனின் மகன் காவன் தீசன் ஆவான். இவர்கள் எல்லோரும் நாகர்குல அரசர்கள். துட்டு கைமுனுவின் தாய் விகாரமாதேவி ஆவாள். இவளது தந்தை கல்யாணியை (களனி) ஆண்ட நாகர்குல மன்னன்  களனி திச்சன் ஆவான். எனவே துட்ட கைமுனு தனது தந்தை வழியிலும் தாய் வழியிலும் நாகர் குலத்தவன் ஆவான்.

இலங்கையின் புராண வரலாற்றை எழுதிய  மகாநாம தேரர்  கூட தேவநம்பிய தீசனை ஒரு சிங்கள பவுத்த அரசன் என இனம் காட்டவில்லை. இவனை மட்டுமல்ல மகாவம்சத்தில் கூறப்படும் எந்த அரசனையும் சிங்கள – பவுத்த அரசன் என அவர் குறிப்பிடவில்லை. அதற்கான காரணம் இருக்கிறது.

மகாவம்சம் கிபி 6 ஆம் நூற்றாண்டளவில்  பாளி மொழியில் மகாநாம தேரர் என்பவரால்   பாடல் வடிவில் எழுதப்பட்ட  வரலாறும் கட்டுக்கதைகளும் கொண்ட ஒரு தொகுப்பு நூலாகும்.   விஜயன் லாலா நாட்டில் இருந்து  இலங்கைக்கு வருகை தந்ததாகச் சொல்லப்படும் கிமு 483 முதல் மகாசேனன் ஆட்சிக் காலம் வரை (கிபி 325-352) வரை இலங்கையை ஆண்ட அரசர்கள் அவர்கள் பவுத்த மதத்துக்கு ஆற்றிய தொண்டுகள், அளித்த தானங்கள், கட்டிய  விகாரைகள், நிறுவிய தாது கோபுரங்கள், அரசர்களுக்கு இடையே நடந்த சண்டைகள், அரியணைக்கான போட்டிகள், கொலைகள்   பற்றி மகாவம்சம் விபரிக்கிறது. மகாவம்சம் எழுதப்பட்டதன் நோக்கம் பற்றிக் குறிப்பிடும் மகாவம்ச தேரர் “பவுத்த சமயத்தின் மேன்மைக்காகவும் பவுத்தர்களின் பக்தி உள்ளுணர்வுகளின் மகிழ்ச்சிகாகவும் எழுதப்பட்டது”       என ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவில் குறிப்பிடுகிறார்.  

கிபி 8 ஆம் நூற்றாண்டவில்  நாகர்குல அரசர்கள்  தங்களின் பெயருக்குப் பின் பின்னொட்டாக வைத்திருந்த நாகன் அல்லது தீசன் என்ற சொல்லை நீக்கிவிட்டார்கள். இந்தக் காலப் பகுதியில்தான் நாகர்குல பவுத்த அரசர்கள் மற்றும் பவுத்த மக்களுக்கு ஒரு அடையாளம் கொடுக்க எண்ணிய பவுத்த தேரர்கள் சிங்கள மொழியை உருவாக்கினார்கள். அதற்கு முன்னர் ஹெல என்ற மொழியே பேசப்பட்டது. சிங்கள மொழியின் உருவாக்கத்துக்குப் பின்னர் அந்த மொழியைப் பேசியவர்கள் சிங்களவர்கள் என அழைக்கப்பட்டனர்.

எல்லாளன் துட்ட கைமுனுவுக்கு இடையிலான போரில் எல்லாளன் படையில் பவுத்த  நாகர்களும் துட்ட கைமுனுவின் படையில் இந்து நாகர்களும் இடம்பெற்றிருந்தார்கள். இனப் பாகுபாடு மேற்குலக கொலனித்துவ படையெடுப்புக்குப் பின்னரே ஏற்பட்டது.

இன்று இலங்கையை ஆண்ட இயக்க அரசன் இராவணனின் வழித்தோன்றல் என்று சிங்களவர்கள் சொல்லிக் கொள்கிறார்கள். தமிழர்களும் இராவணனை சொந்தம் கொண்டாடுகிறார்கள். சிங்களவர்கள் அப்படிச் சொல்லிக் கொள்வதற்குக் காரணம் தாங்கள் இலங்கைத் தீவின் பூர்வீக குடிகள் என்பதை எண்பிக்கலாம் என்ற ஆசையே.  புத்த பெருமான் பரிநிர்வாணம் எய்தி  2500 ஆண்டு நினைவாக வெளியிடப்பட்ட 3 சத முத்திரை ஒன்று சிறிலங்கா அரசால்   வெளியிடப்பட்டது. மகாவம்சக் கதையின் படி விஜயனும் அவனது தோழர்கள் 700 பேரும் அதே நாளில்தான் இலங்கையில் தரையிறங்கினான். இந்த முத்திரை 10 மாதத்துக்குப் பின்னர் திரும்பப் பெறப்பட்டது. காரணம் அந்த முத்திரை விஜயன்  நெய்தல் செய்துகொண்டிருக்கும் குவேனியை சந்திப்பதைப் படமாகக் காட்டிருந்தது அவன் வந்தேறி குடி  என்பதை எண்பிப்பதாக (http://aaivukal.blogspot.com/2012/01/blog-post_24.html) இருந்தது.   இனி சிங்கள பவுத்த  தேசியவாதமும் மற்றும் சிறுபான்மையினரை ஓரங்கட்டலும் என்ற கட்டுரையின் தமிழாக்கத்தைப் படியுங்கள். தமிழாக்கம் நக்கீரன்)

சமீபத்திய ஜனாதிபதித் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னர், இந்தப் பத்திகளில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், இந்தத் தேர்தல் தேசிய முதலாளித்துவத்திற்கும் (அதாவது உள்நாட்டு முதலாளித்துவ வர்க்கத்திற்கும்) மற்றும் இடைத்தரகு முதலாளித்துவத்திற்கும் (அதாவது மேற்குலக முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களைக் கவனிக்கும்) இடையிலான போட்டியாக இருக்கும் என்று குறிப்பிட்டேன்.  இதில் தேசிய முதலாளித்துவம் கிராமப்புற பவுத்த சிங்கள  விவசாயிகள், குட்டி முதலாளித்துவம் மற்றும் தொழிலாள வர்க்கம் ஆகியோரிடமிருந்து பரந்த ஆதரவைப் பெறுவார்கள் எனக் குறிப்பிட்டேன்.  அதே சமயம் இடைத்தரகு முதலாளித்தவத்துக்கு வாக்களிக்கும்  வாக்காளர்களில் 30% மக்கள் இனம்  மற்றும் மத சிறுபான்மையினரால் பெருமளவில் ஆதரிக்கப்படுவார்கள் எனக் கூறியிருந்தேன். அதோடு எண்ணிக்கையில் முக்கியமற்ற கொழும்பை மையப்படுத்தியுள்ள  ஆங்கிலமயமாக்கப்பட்டவர்களும்  இடைத்தரகு முதலாளித்தவத்துக்கு  ஆதரவளிப்பார்கள் எனவும் கூறியிருந்தேன்.   ஜனாதிபதித் தேர்தலில் தேசிய முதலாளித்துவம் உறுதியாக வெற்றி பெற்றது.  முக்கியமாக சிங்கள வாக்குகளால்  அவ்வாறு  அது வெற்றி பெற்றது. இன மற்றும் மத சிறுபான்மையினர் – தமிழர்கள் மற்றும் முஸ்லீம்கள் – அதற்கு எதிராகப் பெருமளவில் வாக்களித்தனர். சிங்கள பவுத்தர்கள் அதற்குப் பெரிதும் ஆதரவாக வாக்களித்தனர். சிங்களக்  கத்தோலிக்க வாக்குகள் அதை நோக்கி சாய்ந்திருப்பதாகத் தெரிகிறது. அதற்கு அநேகமாக கொடூரமான ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் காரணமாக இருக்கலாம்.

தேசிய முதலாளித்துவம் – பூர்வீக முதலாளிகள்,  அந்தச்  சொல் குறிப்பிடுவது போல, ஒரு தேசிய நிறுவனம், இது இனங்கள் மற்றும் மதங்களை வெட்டுகிறது. சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், கத்தோலிக்கர்கள், இந்துக்கள், புராட்டஸ்டன்ட் கிறிஸ்தவர்கள் போன்ற அனைத்து இன மற்றும் மத சமூகங்களிடையே நிச்சயமாக பூர்வீக முதலாளிகள் உள்ளனர். அப்படியானால், தேசிய முதலாளித்துவத்துவம்  சிங்கள பவுத்தர்களின் ஆதரவை மட்டுமே பெற்றது எப்படி? பதில் தேசிய முதலாளித்துவத்துவ சித்தாந்தம் ஆகும். அதாவது சிங்கள பவுத்த தேசியவாதம் ஆகும்.

பரந்த பொருளில், சிங்கள பவுத்த தேசியவாதம் என்பது ஒரு புதிய நிகழ்வு அல்ல.  மாறாக, இது இலங்கையில் பவுத்த மதத்தின் வரலாற்றைப் போலவே பழமையானதாகத் தெரிகிறது. கிபி ஆறாம் நூற்றாண்டில் மகாநாம என்ற புத்த தேரர் பாளி மொழியில் இயற்றிய புகழ்பெற்ற  மகாவம்சத்தில் அதன் உன்னதமான வடிவம் காணப்படுகிறது. மகாவம்சத்தின் சிங்கள பவுத்த தேசியவாதம், அதன்  மிகச் சிறந்த கதாநாயகன் மன்னன் துட்ட கைமுனுவின் ( (கிமு 161 கிமு -137) வாழ்க்கை மற்றும் அவனது சாதனை வாயிலாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. துட்ட கைமுனு பவுத்தரல்லாத தமிழ் மன்னன்  எல்லாளனை வென்று ஒரு ஒன்றிணைந்த சிங்கள பவுத்த  இராச்சியமாக ஒருங்கிணைத்தான். இதனை மகா சங்கத்தின் – பவுத்த குருமார்களது –  ஆசீர்வாதங்கள் மற்றும் உறுதியான ஆதரவுடன் செய்து முடித்தான். 

மகாவம்சத்தின்படி, தமிழர்கள் அந்நியர், அதனால் அவர்கள் (தமிழர்கள்) நாட்டின் அரசியலில் ஒரு பகுதியினராகக் கருதப்படவில்லை.  நாடு பவுத்தர்களான சிங்களவர்களை  மட்டுமே உள்ளடக்கியதான தோற்றப்பாடு காணப்பட்டது.  துட்ட கைமுனுவின் சாதனை என்பது ஒரு  வெளிநாட்டுப் பகைச்  சக்தியை வெளியேற்றி (இலங்கைத்) தீவினை ஒரே தேசமாக – சிங்கள பவுத்த தேசமாக  ஒருங்கிணைத்தது ஆகும்.  அதில் மகாவம்சத்தின் சிங்கள பவுத்த தேசியவாதம் உள்ளடக்கப்பட்டது.

 

Dutugemunu ruled from the ancient city of Anuradhapura. He inherited a city which already possessed the Thuparama dagoba and the tanks, Nuwara Wewa, Tissa Wewa and the Abaya Wewa: He built the great stupas, Mirisawetiya and Ruwanweliseya. The Anuradhapura civilization was a centralized hydraulic one, based on rice farming. Its agriculture was rooted on great irrigation works, such as tanks and canals. Needless to say, this called for a highly centralised state. It was a caste based society as opposed to a class based one. Its ruling elite consisted of the Kshatriya caste (the ancient warrior caste), guided by the Maha Sanga, which had replaced the Brahmin caste with the advent of Buddhism. Its political system was oriental despotism. The king was an absolute ruler.


துட்ட கைமுனு பண்டைய நகரமான அனுராதபுரத்திலிருந்து ஆட்சி செய்தான்.  அவன் ஆட்சிக்கு வருமுன்னரே  துப்பராம தாதுகோபுரம் மற்றும்  நுவரேலிய,  திஸ்ச வேவா மற்றும் அபயா வேவா ஆகிய ஏரிகளைக் கொண்டிருந்த ஒரு நகரத்தை வாரிசாகப் பெற்றிருந்தான்.  மிரிசாவெத்தியா மற்றும் ரூவான்வெலிசாயா என்ற பெரிய தாதுகோபுரங்களை அவன் கட்டினான். அனுராதபுர நாகரிகம் நீர்வள வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட ஒரு மையப்படுத்தப்பட்ட 
(centralized hydraulic) ஒன்றாகும்.  அதன் வேளாண்மை பெரிய ஏரிகள் மற்றும் கால்வாய்கள் போன்ற பெரிய நீர்ப்பாசன திட்டங்களில் வேரூன்றி இருந்தது. இது மிகவும் மையப்படுத்தப்பட்ட அரசுக்கு அழைப்பு விடுத்தது என்று சொல்ல தேவையில்லை. இது ஒரு வர்க்க அடிப்படையிலான சமூகமாக இல்லாது  சாதி அடிப்படையிலான சமூகமாக இருந்தது. அதன் ஆளும் உயரடுக்கு மகா சங்கத்தால் வழிநடத்தப்பட்ட க்ஷத்திரிய சாதியை (பண்டைய போர்வீரர் சாதி) கொண்டிருந்தது.  இந்தப்  பிராமண சாதி அமைப்பு பவுத்தத்தின் வருகையுடன் மாறியது. அதன் அரசியல் அமைப்பு கிழக்கத்திய சர்வாதிகாரம் ஆகும். மன்னன்  சர்வ  வல்லமையும் படைத்தவனாக இருந்தான்.


சிங்கள பவுத்த அரசின் சரிவு மற்றும் வீழ்ச்சி

மகாவம்சத்தின் சிங்கள பவுத்த தேசியவாதம் அனுராதபுர நாகரிகத்தின் சிறப்புப் பண்பாக இருந்தது.  இது அந்தக் காலத்தின் சமூக – பொருளாதார யதார்த்தங்களுடன் நன்கு பொருந்தி இருந்தது: அது அதன் பொருத்தத்தைத் தக்க வைத்துக் கொண்டது. துட்ட கைமுனுவின் காலத்திலிருந்து ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அனுராதபுர நாகரிகம் செழித்து வளர்ந்தது என்ற  முடிவை நிரூபிக்கிறது.

தென்னிந்திய சோழர்கள்  இலங்கை மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றியதன் மூலம் பத்தாம் நூற்றாண்டின் கடைசி தசாப்தங்களில் அனுராதபுர நாகரிகம் வீழ்ந்தது. சிங்கள ஆளும் பிரிவினரிடையே ஏற்பட்ட சச்சரவு காரணமான உட்சிதைவு, அனுராதபுரத்தின் வீழ்ச்சிக்குப் பங்களித்தது. இருப்பினும், சிங்கள பவுத்த அரசு விஜயபாகு(கி.பி 1155 கி.பி -1110 ஆட்சி) மற்றும் மாமன்னன் பராக்கிரமபாகு (கி.பி 1153 – கி.பி 1183) ஆகியவர்களின் ஆட்சியின் கீழ் பொலனருவ இராச்சியத்துடன் ஒரு அற்புதமான ஆனால் ஒப்பீட்டளவில் குறுகிய காலத்திற்கு மீள்ளெழுச்சி கண்டது.  இருப்பினும், கலிங்க  மாகனின்  படையெடுப்பு (கி.பி 1215 – கி.பி 1235) இந்த எழுச்சியை மீளச் சரிசெய்ய முடியாதவாறு மாற்றியது. இலங்கையின் மாபெரும் சிங்கள பவுத்த நீர்வள வேளாண்மை நாகரிகம் வீழ்ச்சியடைந்தது. சிங்களவர்கள் வட- மத்திய சமவெளிகளைக் கைவிட்டு, பெருமளவில், தென்மேற்கு மற்றும் நாட்டின் மத்திய மலைப் பகுதிகளுக்குப் குடி பெயர்ந்தனர். இது தென்னிந்தியாவிலிருந்து குறிப்பிடத்தக்க இந்து தமிழர்களின் குடிப்பெயர்ச்சிக்கும் மற்றும் மத்திய கிழக்கு மற்றும் இந்தியாவிலிருந்து முஸ்லீம்  வணிகர்களது  குடிப்பெயர்வுக்கும் வழி வகுத்தது. இதைத் தொடர்ந்து போர்த்துகீசிய, ஒல்லாந்த  மற்றும் பிரித்தானியா போன்ற மேற்கு கொலனித்துவ படையெடுப்பாளர்களால் (இலங்கைத்)  தீவு கைப்பற்றப்பட்டது.  மேலும்  பூர்வீக மக்களை ரோமன் கத்தோலிக்கம் மற்றும் புராட்டஸ்டன்ட் கிறிஸ்தவத்திற்கு மதம் மாற்றினர். இதனால் (இலங்கைத்) தீவு பல்லின, பன்மொழி மற்றும் பல்லின மதத்தவர் வாழும் நாடாக மாறியது.

முதலாளித்துவத்தின் வளர்ச்சி

முதலாளித்துவம் என்பது  கொலனித்துவ படையெடுப்பாளர்களின் மிக முக்கியமான மரபுகளாகும். இது முக்கியமாக ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விளைவாக, இலங்கை சாதி அடிப்படையிலான சமூகத்திலிருந்து வர்க்க அடிப்படையிலான சமூகமாக மாற்றப்பட்டது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் பொருளாதாரத்தில் மிகப் பெரிய பங்கைத் தக்க வைத்துக் கொண்டாலும் – தேயிலை மற்றும் இரப்பர் தோட்டங்களால்  ஒரு உள்நாட்டு  முதலாளித்துவ வர்க்கமும் தோற்றம் பெற்றது.  இந்த வகுப்பு மதுபானத்  தொழில்,  கரிபொருள் சுரங்கம், மொத்த வணிகம் மற்றும் தென்னம்  தோட்டம் ஆகியவற்றில் முக்கியத்துவம் பெற்றது. இது சமீபத்தில் வேறு தொழில்களும் நகர்ந்துள்ளது.  எடுத்துக்காட்டாக ஆடை உற்பத்தி மற்றும் சுற்றுலா போன்ற பல தொழில்களுக்கு நகர்ந்தது. ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, இந்த வகுப்பு சிங்கள பவுத்தர்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப் படவில்லை.  அதற்கு மாறாக, இலங்கைத் தமிழர்கள், முஸ்லிம்கள், இந்தியத் தமிழர்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள் போன்ற பிற சமூகங்களைச் சேர்ந்த முதலாளித்துவமும் இதில் அடங்கும்.

தேசிய முதலாளித்துவ மற்றும் சிங்கள பவுத்த தேசியவாதம்

முதலாளித்துவம் நிச்சயமாக மனிதகுல வரலாற்றில் மிகவும் புரட்சிகர நிகழ்வுகளில் ஒன்றாகும். நிலப் பிரபுத்துவம், கிழக்கத்திய சர்வாதிகாரம் மற்றும் அடிமைத்தனம் போன்ற அதன் முன்னோடிகளைப் போலல்லாமல், இது எப்போதும் சீர்குலைக்கும் மற்றும் மாறும் தன்மையுடையது. நிலப்பிரபுத்துவம், கிழக்கத்திய சர்வாதிகாரம் மற்றும் அமெரிக்க அடிமைத்தனத்தைக் களைவதில் இது மிகவும் முற்போக்கானது. மேலும், இது கண்கவர் தொழில்நுட்ப முன்னேற்றங்கள், முதலாளித்துவ சனநாயகம், பெரும் உற்பத்தி, மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி மற்றும் சிவில் உரிமைகள் ஆகியவற்றைக் கொண்டு வந்துள்ளது. எவ்வாறாயினும், முதலாளித்துவம் மற்றும் முதலாளித்துவ வர்க்கங்களின் ஒரு புதிரான அம்சம் அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்கு பல்வேறு வகையான தேசியவாதத்தையும் ஏகாதிபத்தியத்தையும் பின்பற்றும் அவர்களின் போக்காகும்.

1950 ளில் இருந்து இலங்கை தேசிய முதலாளித்துவத்தால் மகாவம்சத்தை ஒத்த சிங்கள பவுத்த தேசியவாதத்தை ஏற்றுக்கொள்வது ஒரு தெளிவான எடுத்துக்காட்டு. ஆனால், பின்னர், மையப்படுத்தப்பட்ட ஒற்றைக்கூறு சிங்கள பவுத்த அமைப்பின் அரசியல் சூழலில் உள்ளடக்கிய சிங்கள பவுத்த தேசியவாதம், நவீன ஸ்ரீலங்காவின் பல இன, பல மத மற்றும் பன்மொழி சமுதாயத்தின் பின்னணியில் பிரத்தியேகமாகவும், பிளவுபட்டதாகவும் மாறிவிட்டது.  இலங்கையின் வளர்ந்து வரும் தேசிய முதலாளித்துவத்தின் சுதந்திரத்திற்குப் பிந்தைய தலைவர்கள் ஏன் மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு தலைமையிலான இந்திய தேசிய காங்கிரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, மேலும் அனைத்தையும் உள்ளடக்கிய தேசியவாதத்திலிருந்து ஒரு குறிப்பை எடுக்கவில்லை? இதற்கு அரசியல் குறுகிய போக்கு அல்லது வெளிப்படையான சந்தர்ப்பவாதம் அல்லது கற்பனையின்மை காரணமாக இருந்ததா? இலங்கையின் புகழ்பெற்ற கடந்த காலத்தின் சிங்கள பவுத்த  தேசியவாதத்தின் வடிவத்தில் ஆயத்தமாகவும், வரலாற்று ரீதியாக அனுமதிக்கப்பட்ட மாதிரியாகவும் கிடைத்ததா? பிரிட்டிஷ் கொலனித்துவ எஜமானர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிளவு மற்றும் ஆட்சிக் கொள்கை, அனைத்து சமூகங்களிலிருந்தும் தலைவர்களை ஆழ்ந்த மற்றும் பரந்த சமூக – அரசியல் யதார்த்தங்களுக்கு ஏற்ப ஒரு புதிய மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய தேசியவாதத்தை உருவாக்க இயலாது? மாற்றீட்டில், மக்களைப் பிளவுபடுத்த சுதந்திரத்திற்குப் பிந்தைய தலைவர்கள் வேண்டுமென்றே எடுத்த நடவடிக்கையா?


தேசிய முதலாளித்துவத்தின் சிங்கள பவுத்த தேசியவாதம் சிறுபான்மையினருக்கு ஏற்கத்தக்கதல்ல என்பதை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. இது நாட்டிற்குப் பல நடுத்தர மற்றும் குறுகிய கால மாற்றங்களைக் கொண்டிருக்கலாம். மலேசியாவைப் போலவே, ஓரங்கட்டப்பட்ட இன – மத சிறுபான்மையினர் சிங்கள பவுத்த ஆதிக்கத்தை ஒரு தவறான சாதனையாளராக ஏற்றுக்கொள்ள உந்தப்படுகிறார்கள்.

இது கணிசமான சிறுபான்மையினரை  சிங்களமயமாக்கல் மற்றும் பவுத்தமயமாக்கல் இரண்டுக்கும் இட்டுச் செல்லும்.  சிறுபான்மையினரின் அளவு, செல்வாக்கு மற்றும் பிராந்திய உடைமைகளைப் பொறுத்தவரை, இது குறிப்பிடத்தக்க எதிர்ப்பின்றி நடக்க வாய்ப்பில்லை. இது குறிப்பாகத் தமிழர் ஆதிக்கம் செலுத்தும் வட மாகாணத்துக்குப் பொருந்தும். வட மாகாணம்  தமிழ் ஆதிக்கம் கொண்ட தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டிற்கு அருகிலேயே உள்ளது. சிறுபான்மையினர் உட்பட அனைத்து சமூகங்களுக்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு புதிய, உள்ளடக்கிய தேசிய நெறிமுறைகளை உருவாக்கத் தேசிய முதலாளித்துவம் உந்தப்படும் இடத்தில் ஒரு சாதகமான விளைவு இருக்கும். இது ஒரு கடினமான பணியாக இருக்கும். ஆயினும்கூட, தேசிய முதலாளித்துவம் அவ்வாறு செய்யாததன் விளைவாக ஒரு இருத்தலியல் அச்சுறுத்தலை உணர்ந்தால் அது சாத்தியமற்றது அல்ல. இதுவரை முதலாளித்துவக் கட்சிகளுடன் இணைந்திருக்கும் ஓரங்கட்டப்பட்ட சிறுபான்மையினர், சிங்கள பவுத்தர்களின் பெரும்பான்மையினரிடையே பொருளாதார ரீதியாக ஓரங்கட்டப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் ஏழை விவசாயிகளுடன் கைகோர்த்து, உள்ளடக்கிய தேசிய நெறிமுறைகளை உருவாக்குவது மற்றொரு வாய்ப்பாகும். இது ஒரு புரட்சிகர இடது மாற்றாக இருக்க வேண்டும். மிகவும் சோகமான விளைவு என்னவென்றால், இலங்கையியன்  உள் வகுப்புவாத மோதல்களைப் பயன்படுத்தி  நாட்டை விரோத மாநிலங்களாக உடைப்பது ஆகும், பெரிய வல்லரசுகளான சீனா, ரஷ்யா, அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற  வல்லாசுகளால் பல துண்டுகளாக வெட்டப்படலாம். 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்