வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த ஆயர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு!

வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த நான்கு ஆயர்களும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினை சந்தித்து பேசவுள்ளதாக கூறப்படுகின்றது.

எதிர்வரும் 13ஆம் திகதி இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது இதற்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘புதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து அரவணைத்துச் செல்ல விருப்பம் காட்டுவது எமக்குத் தெரிகிறது.

அவர் ஊடகங்களுக்கு வழங்குகின்ற பேட்டிகளும், அறிக்கைகளும் அதனை உறுதிப்படுத்துகின்றன.

இது தொடர்பாக நாட்டிலுள்ள கிறிஸ்தவ சமூகத்தினரும் அவருக்கு நல்ல பல ஆலோசனை வழங்க சித்தமாயுள்ளோம்.

அதற்காக எங்களை சந்திப்பதற்கு எதிர்வரும் 13ஆம் திகதி நேரம் ஒதுக்கியுள்ளார்.

அன்றைய தினம் நாம் எதிர் நோக்குகின்ற பல பிரச்சனைகளை அவரிடம் முன்வைப்போம்.

நல்ல பலன் கிடைக்குமென நம்புகிறோம். எமது தூதுக்குழுவுக்கு யாழ்.மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் தலைமை தாங்குவார்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்