மின்சார சட்டத்தில் திருத்தம் செய்ய சிறப்பு குழு

புதிய மின் உற்பத்தி தொடர்பான முடிவுக்கு சட்டத்தின் சில விதிகள் தடையாக இருப்பதினால் அதனை திருத்தியமைத்து தொடர்பாக ஆராய்வதற்கு சிறப்பு குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கையின் எதிர்கால மின் நெருக்கடி குறித்து இலங்கை மின்சார வாரியம், பொது பயன்பாட்டு ஆணையகம் மற்றும் மின் மற்றும் எரிசக்தி அமைச்சின் அதிகாரிகள் ஆகியோருடன் அமைச்சர் மஹிந்த அமரவீர கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மஹிந்த அமரவீர மேலும் கூறியுள்ளதாவது, “2020 ஏப்ரல்- மே மாதத்திற்குள் பாரிய மின் நெருக்கடியை  நாடு எதிர்கொள்ள நேரிடும். இது மின்வெட்டுக்கு வழிவகுக்கும்.

மேலும் சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின் திட்டத்தின் கூடுதல் திறனை செயற்படுத்த இலங்கை மின்சார வாரியமும் மின் அமைச்சகமும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தெரியவந்தது.

மேலும் இப்பிரச்சினைக்கு புதிய முறைகளை பயன்படுத்துவதற்கு தேசிய மின்சார சட்டம்  தடையாக இருப்பதாக மின் துறையின் மூத்த அதிகாரிகள் கூறுகின்றனர்.

எனவே தற்போதுள்ள மின்சாரச் சட்டத்தை ஆராய்ந்து, அதிலுள்ள தடைகளை நீக்குவது குறித்து ஆராய்ந்துள்ளோம்.

இதற்காக சிறப்புக் குழுவொன்றை நியமித்துள்ளோம். மேலும் மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாத வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்