கல்முனை பிரதேசத்தில் வெள்ளம் பாதித்தோருக்கு கோடீஸ்வரன் எம்.பி. நிவாரண உதவி!

கல்முனையில் வெள்ளம் பாதித்தோருக்கு கோடீஸ்வரன் எம்.பி. நிவாரண உதவி!

கல்முனைப் பிரதேசத்தில் தொடர்ந்துபெய்த அடைமழை காரணமாக ஏராளமான மக்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், வெள்ளம் பாதித்த மக்களை சில நாள்களுக்கு முன்னர் நேரில் சென்று பார்வையிட்டமையுடன், அவர்களின் தேவைகள் குறித்தும் ஆராய்ந்து வெள்ளநீரை எவ்வாறு வெளியேற்றுவது என்பது தொடர்பிலும் ஆராய்ந்தார்.

இன்று கல்முனைப் பகுதிக்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன், வெள்ளம் அதிகம் பாதித்த வறுமைக்கோட்டுக்குட்பட்ட   மக்களுக்கு உலர் உணவுப் பொருள்களை நிவாரணமாக வழங்கிவைத்தார்.

கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான சிவலிங்கம், செல்வநாயகம் ஆகியோரும் நாடாளுமன்ற உறுப்பினருடன் சென்று நிவாரணம் வழங்கலில் ஈடுபட்டனர். அத்துடன், அரசாங்க அதிபரிடமும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்