கல்முனை பிராந்தியத்தில் விசேட போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்தியத்தில் அதிகாலை முதல் மதியம் வரை அம்பாறை மாவட்ட  விசேட   போக்குவரத்து பொலிஸார்   மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை (06)  அதிகாலை முதல் மதியம்   வரை  இந்த திடீர் சோதனை நடவடிக்கையானது    கல்முனை சுற்றுவட்டம்,நற்பிட்டிமுனை பிரதான சந்தி ,தாளவட்டுவான் சந்தி ,பாண்டிருப்பு,போன்ற இடங்களில்  மேற்கொள்ளப்பட்டது.

இத் திடீர் சோதனை நடவடிக்கையானது  அம்பாரை மாவட்ட சிரேஸ்ட   பொலிஸ் அத்தியட்சகர் ஜி.எச்.மாரப்பன வழிகாட்டலில் இடம்பெற்றதுடன் இதன் போது  விழிப்பூட்டல் செயற்பாடுகள்   மற்றும் இளைஞர்கள் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துவது , தலைக்கவசம் அணிவதில்லை  ஒரு மோட்டார் சைக்கிளில் இருவருக்கு மேற்பட்டவர்கள் பயணிப்பது  அதிவேகமாக செல்வது தொடர்பாக வாகன உரிமையாளர்களுக்கு போக்குவரத்து பொலிஸாரினால்  விளக்கமளிக்கப்பட்டது.

இச்சோதனை நடவடிக்கையானது  அம்பாறை மாவட்ட விசேட போக்குவரத்து பொலிஸாருடன் இணைந்து    கல்முனை  பொலிஸ் நிலைய  போக்குவரத்து பொலிஸார்   இணைந்து  முக்கிய சந்திகள்  பிரதான  வீதிகளில்  திடீர் சோதனை நடவடிக்கை  மேற்கொண்டனர்.

மேலும்  போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகளுக்கு சாரதி அனுமதி பத்திரங்கள் இருந்தும் வீதி போக்குவரத்து ஒழுங்கு முறை தொடர்பில் போதிய அறிவின்மை தொடர்பாக கடமையில் இருந்த போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் ஊடகவியலாளரிடம் குறிப்பிட்டதுடன்   அதிகமான சாரதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்