சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வு வீதி நாடகம்

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் சாய்ந்தமரது பிரதேச செயலக கலாசார பிரிவு நடத்தும்  சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வு வீதி நாடகம் இடம்பெற்றது.

வெள்ளிக்கிழமை(6) முதல் செவ்வாய்க்கிழமை(10) காலை 9 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதுடன் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.ஐ ஹிக்காஸ் தலைமையில் இன்றைய நிகழ்வு பிரதேச செயலக நுழைவாயில் பிரதான வீதியில்  இடம்பெற்றது.

இந்த நிகழ்வை சாய்ந்தமருது பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் ஏ.எச்.எம் அம்ஜத் நெறிப்படுத்தினார்.

மேலும் ஏனைய நிகழ்வுகள் யாவும் பொதுச்சந்தை பிரதான வீதி காகில்ஸ் பூட்ஸிற்றி பிரதான வீதி பெண்கள் மார்க்கட் ஸீ ப்றீஸ் சந்தி ஆகிய இடங்களில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்