சீரற்ற காலநிலை – பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க நிதி ஒதுக்கீடு!

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள 21 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு தேசிய இயற்கை காப்புறுதி வேலைத்திட்டத்தின் கீழ் 5.6 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மத்திய நிலையத்தின் பணிப்பாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த நிதி மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் கீழ் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு அடிப்படை நிவாரண நிதியாக 3.7 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 21 மாவட்டங்களில் 70 ஆயிரத்து 957 குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 35 ஆயிரத்து 906 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அனர்த்தங்கள் காரணமாக நால்வர் உயிரிழந்துள்ளதுடன், 6 பேர் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் காணாமல்போயுள்ளனர்.

20 வீடுகள் பகுதியளவிலும், 943 வீடுகள் முழுமையாகவும் சோதமடைந்துள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்