60 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம்!

பிரதி பொலிஸ்மா அதிபர்கள் நால்வர் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் 60 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

நேற்று(வெள்ளிக்கிழமை) முதல் அமுலாகும் வகையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பிரதி பொலிஸ்மா அதிபர்கள் நால்வருக்கு மேலதிகமாக எட்டு சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கும், 11 பொலிஸ் அதிகாரிகளுக்கும் இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் உதவி பொலிஸ் அதிகாரிகள் 18 பேருக்கும், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் 20 பேர் உள்ளிட்ட 60 பேருக்கு இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்