அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டதாக வெளிவரும் செய்திகளில் உண்மையில்லை – தமிழ் அரசியல் கைதி!

அனுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து ஏழு அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டதாக வெளிவரும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லையென விடுவிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளில் ஒருவரான முருகையா கோமகன் தெரிவித்துள்ளார்.

யாழில் நேற்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடையத்தினை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் 12 ஆயிரம் முன்னாள் போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

எனினும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்காலத்தில் எந்வொரு அரசியல் கைதியும் புனவாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்படவில்லை’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்