நிமோனியா காய்ச்சலினால் யாழ். போதனா வைத்தியசாலையில் ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர் நேற்று (வெள்ளிக்கிழமை) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

பதல்கும்புர மொனராகலை பகுதியினை சேர்ந்த சிறில் திசாநாயக்க (வயது 50) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்தவர் ஆவார்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, கடந்த 2ஆம் திகதி வாழைச்சேனையில் இருந்து பாரவூர்தி மூலம் விறகு ஏற்றி வந்த அவருக்கு அன்று இரவு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மறுநாள் 3ஆம் திகதி மாலை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.

எனினும் மேற்படி குடும்பஸ்தர் நேற்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். நுரையீரலில் ஏற்பட்ட கிருமி தொற்று காரணமாக இவருக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவித்தன.

இறப்பு விசாரணையினை வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதணையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்