அநாதரவாக வீசப்பட்ட சிசு மீட்பு – புத்தளத்தில் சம்பவம்

புத்தளம் – குருணாகல் பிரதான வீதியின் 4 ஆம் கட்டைப் பகுதியில் கடற்படை முகாமுக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் அநாதரவாக வீசப்பட்ட நிலையில் காணப்பட்ட பிறந்து ஒரு நாளேயான சிசு மீட்கப்பட்டு புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவ்வீதியினால் சென்ற ஒருவர் இக் குழந்தையைக் கண்டுள்ளதுடன் இது தொடர்பில் புத்தளம் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸ் குழு, அம்புலன்ஸை வரவழைத்து உடனடியாக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு அச்சிசுவை அனுப்பினர். அங்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிசுவை பிரவிசித்த தாய் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்