ஊர்காவற்றுறை தவிசாளர் 14 நாள் விளக்கமறியலில்!

ஊர்காவற்துறை பிரதேச சபை தவிசாளரும் தீவகம் வடக்கு ஈபிடிபி பொறுப்பாளருமான ஜெயகாந்தன் என்பவரும் அவரது சகாவும் நேற்றையதினம் ஊர்காவற்துறை பொலிசாரால் கைது சேய்யப்பட்டு இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

நேற்றைய தினம் பிரதேச சபைக்கு சொந்தமான வாகனத்தில் நிறைபோதையில் ஊர்காவற்துறை வீதிகளில் சுற்றித்திரிந்து பொதுமக்களை மிரட்டியதாகவும் அதனை தட்டிக்கேட்ட ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய தமிழ் உப பொலீஸ் பரிசோதகரோடு இவர்கள் முரண்பட்டனர் எனவும் பொலிசார் கூறுகின்றனர் .

இரண்டாவது தடவையாகவும் தவிசாளராக பதவி வகிக்கின்ற இந்த நபர் தினமும் மாலை வேளைகளில் மதுபோதையில் அட்டகாசங்களில் ஈடுபடுவது வழமையானதே . கடந்த ஒரு வருட காலத்தில் மாத்திரம் இந்நபர் மூன்று தடவைகள் ஊர்காவற்துறை பொலிசாரல் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்படிருந்தமை குறிப்பிடத்தக்கது .

நேற்று பொலீஸாருடனும் முரண்பட்டமையால் இவர் ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு, 14 நாள்கள் தடுப்புக்காவலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

ஆட்சி மாற்றத்தின் பின்னர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சுப் பதவியைப் பெற்றதும் மீண்டும் பழையபடி தீவகம் மற்றும் ஏனைய பிரதேசங்களிலும் இவர்களது அட்டகாசங்களால் மக்கள் விசனமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்