வெளிநாட்டு அழுத்தங்களினால் எதையும் சாதித்துவிட முடியாது! – தீர்வு குறித்து தம்முடன் பேசுமாறு சம்பந்தனிடம் அரசு வேண்டுகோள்

“அதிகாரப் பரவல் மற்றும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து தீர்வு காண்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அமெரிக்கத் தூதுவர் உள்ளிட்ட வெளிநாட்டுத் தூதுவர்களுடன் பேச்சு நடத்துவதை விடுத்து முதலில் தற்போதைய அரசுடனேயே பேச்சு நடத்த வேண்டும்.”

– இவ்வாறு தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன வலியுறுத்தினார்.

“வெளிநாட்டு அழுத்தங்களினால் இலங்கைக்குள் எதனையும் சாதித்துவிட முடியாது என்பதை கடந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் உணர்த்துவதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முதலில் புரிந்துகொள்ள வேண்டும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

“இலங்கையில் சகல இன மக்களுக்கும் ஒரு ஜனாதிபதியும், ஒரு பிரதமரும், ஓர் அரசுதான் இருக்கின்றது. எனவே, தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்தும், அதற்கான தீர்வுகள் குறித்தும் தற்போதைய ஜனாதிபதி – பிரதமர் தலைமையிலான அரசுடன்தான் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு நடத்த முடியும்” எனவும் அவர் மேலும் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்