அரசியல்வாதிகள் தன்னிச்சையாக செயற்படக் கூடாது- நிமல்

அரசியல்வாதிகள் பதவியில் இருக்கும்போது தன்னிச்சையாக செயற்படுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டுமென அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

பண்டாரவளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலம் நாட்டில் அடுத்து நடைபெறவுள்ள தேர்தல்களில் பொதுஜன பெரமுனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும்  ஒன்றாக இணைந்தே செயற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அரசியல்வாதிகள் மக்களின் நலனுக்கு முன்னுரிமை கொடுத்து செயற்படுவதுடன் பதவியில் இருக்கும்போது தன்னிச்சையாக செயற்படக்கூடாது எனவும் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்