நாட்டின் நிர்வாகக் கட்டமைப்புக்கு மையப் புள்ளி 13 ஆவது திருத்தம்! அது அவசியம் என்கிறார் சி.வி.கே.

13 ஆவது திருத்தச் சட்டத்தை ஒழிக்க வேண்டும் எனதென்னிலங்கையில் உள்ள தீவிரவாதப் போக் குடையவர்கள் கூறிவருகின்றனர். எனி னும்நாட்டின் நிர்வாகக்கட்டமைப்பை முன்னெடுக்க 13ஆவது திருத்த சட்டமே தொடர்ந்தும் இருக்க வேண்டும் என வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானம் தெரிவித்தார்.

நல்லூரில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நேற்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக்கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

இலங்கையில் 13 ஆவதுதிருத் தச்சட்டத்தை எதிர்க்க வேண்டும், அதனை ஒழிக்க வேண்டும் எனத் தென்னிலங்கையில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.இது புதிதான விடயம் அல்ல. எனினும் தற்போது பொதுபலசேனாவின் தலைவர் ஞானசாதார தேரர் கூறியுள்ளார்.

13ஆவது திருத்தச் சட்டத்தை ஒழிக்க வேண்டும் என தென்னிலங்கையில் உள்ள தீவிரவாதப் போக்குடையவர்கள்கூறிவருகின்றனர். அந்தவரிசையில் இவரும் இதனைக் கூறியுள்ளார்.

13 ஐ பொறுத்தவரை இந்த சட்டம் வந்த காலத்தில் இருந்தே தமிழர்களின் அபிலாசைகளை பூர்த்திசெய்யவில்லை என்றுகூறி வருகினறோம். அத்துடன் இந்த சட்டத்தை ஓர் ஆரம்பப்புள்ளியாக வைத்து பயணிக்க முடியும் என்றே நம்பி வருகின்றோம்.

இந்த சட்டம் இலங்கையின் அரசமைப்பின் ஓர் அங்கமாக இருந்தே இப்போதும் வருகின்றது. இதன் ஊடாக மாகாண சபை முறைமை உருவானது. இந்த முறைமை அதிகார பரவலாக்கம் என்றவிடயத்தின் அடிப்படையாக அமைகின்றது.

குறிப்பாக ஐ.நாவின் அதிகார பரவலாக்கம் என்பதில் மாகாண சபை முறைமையே கூறப்பட்டுள்ளது.எனவே நாட்டின் நிர்வாக கட்டமைப்பை முன்னெடுக்க 13 ஆவது திருத்த சட்டம் தொடர்ந்தும் இருக்கவேண்டும்- என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்