தமிழரசின் மானிப்பாய் தலைவரால் மாணவர்களுக்கு கல்வி ஊக்குவிப்பு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதித் தலைவரும் வலி.தெற்கு பிரதேசசபையின் செயற்றிறன்மிக்க முன்னாள் தவிசாளருமான தியாகராஜா பிரகாஷ், தனது மனித நேயத்துக்கான இளைஞர் படையணி (Active Force) ஊடாக கல்வி ஊக்குவிப்புக்காக கற்றல் உபகரணங்களை வழங்கியுள்ளார்.

ஏழாலை வடக்கு, ஏழாலையில் உள்ள கண்ணகி முன்பள்ளியில் வைத்து ஏழாலை பிரதேசத்தில் வறுமைக்குட்பட்ட ஏராளமான மேற்பட்ட மாணவர்களுக்கு பகுதி பகுதியாக  1000 அப்பியாசக் கொப்பிகள் இவ்வாறு கற்றல் உபகரணங்களாக வழங்கப்பட்டன.

ஏழாலை மத்திய சனசமூக நிலையம், ஏழாலை லெனின் சனசமூக நிலையம், மயிலங்காடு இளைஞர் நற்பணி மன்றம், வசாவிளான் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கே இந்த கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

தொடர்ந்தும் ஏனைய இடங்களுக்கும் இவ்வாறான கல்வி ஊக்குவிப்புப் பணிகள் தொடர உள்ளன எனவும் பிரகாஷ் புதிய சுதந்திரனுக்குத் தெரிவித்தார்.

வலி.தெற்கு பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் தி.பிரகாஷ், வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற குடும்பங்களுக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கும் உதவும் வகையில் மனித நேயத்துக்கான இளைஞர் படையணி (Active Force) ஒன்றை உருவாக்கி, அதனூடாகத் தனது சொந்த நிதியில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பல இடங்களில் வாழ்கின்ற மக்களுக்கு கிராமசேவையாளர்கள் ஊடாகத் தரவுகளைப் பெற்று உலர் உணவுப் பொருள்களை இவர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்