இரண்டரை மாத கைக்குழந்தை கிணற்றிலிருந்து சடலமாக கண்டெடுப்பு: யாழில் சம்பவம்

யாழ்ப்பாணத்தில் இரண்டரை மாத கைக்குழந்தையொன்று  கிணற்றிலிருந்து சடலமாக  கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு 11.30மணியளவில் துன்னாலை குடவத்தைப் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, தந்தையார் இரவு கடமைக்காக சென்றிருந்த நிலையில் தாயாருடன் குறித்த பாலகன் உறங்கியுள்ளான்.

இந்நிலையில் பாலகனை நேற்றிரவு 11.30 மணி முதல் காணவில்லையென தாயார் பொலிஸில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

குறித்த முறைப்பாட்டுக்கமைய குழந்தையை தேடியப்போது, இன்று காலை கிணற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டதாகவும் பின்னர்  குழந்தையின் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக மந்திகை வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் உடற்கூற்று விசாரணையின் பின்னரே உண்மை துலங்கும் என பொலிஸார்  குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்துள்ள நெல்லியடிப் பொலிஸார், தந்தையையும் தாயாரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்