வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்து ஸ்ரீநேசன் அதிருப்தி

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணப் பணிகளுக்காக அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட 2.8 மில்லியன் ரூபாய் நிதியுதவி போதுமானதாக இருக்காது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பபாதிப்புக்குப் பின்னரான நிலைமை குறித்து இன்று (திங்கட்கிழமை) கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவித்த அவர், “வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்கள் அடிப்படை வசதிகள் குறைந்த நிலையில் கதியற்றுப் போயுள்ளார்கள். தமது நாளாந்த உணவுக்கு மிகவும் சிரமப்படுகின்றார்கள்.

குறிப்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிரான், வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிராமங்களில் வாழும் மக்கள் தொடர்பாக அரசாங்கம் விஷேட கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது.

வெள்ளப் பாதிப்பு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஏற்பட்டுள்ளது.

எனவே பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் உடனடியாக மேலதிக நிதிகளை பெற்றுக்கொடுக்க வேண்டும்” என நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்