கொழும்பு வெள்ளவத்தை கடற்பரப்பிற்கு அருகே குவியும் மக்கள் கூட்டம்

கொழும்பு வெள்ளவத்தை கடற்பரப்பில் கடற்சிங்கம் ஒன்று கரை வந்துள்ளமையினால் அதனை பார்க்க பெருமளவு மக்கள் அவ்விடத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இன்று (திங்கட்கிழமை) நண்பகல் 12 மணியளவில் இந்த கடற்சிங்கம் கரைக்கு அடித்து வந்ததாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த பகுதிக்கு இலங்கை கடற்படையினர் வருகை தந்துள்ளதுடன் குறித்த விலங்கிற்கு இடத்தை அனுமதிக்குமாறு பலமுறை மக்களை அறிவுறுத்தினர்.

இவை உலகின் மிக ஆபத்தான கடல் விலங்குகளில் ஒன்று என தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்